இன்று 23.02.2026 காலை 10.15 நிமிடத்திற்கு திருவனந்தபுரத்தில் உள்ள கேரள சட்டமன்ற வளாகத்தில், கேரள முதலமைச்சர் மாண்புமிகு பினராயி விஜயன் அவர்களை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நேரில் சந்தித்து, நாடாளுமன்ற இரு அவைகளிலும் தான் ஆற்றிய உரைகளின் தொகுப்புக்களை முதலமைச்சர் அவர்களிடம் வழங்கி, அணிந்துரை தர வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.
மிகுந்த மகிழ்ச்சியுடன் அவசியம் தருகிறேன் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் கூறினார்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
23.02.2026
