சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள்!
வைகோ வாழ்த்து
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு அலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
“இந்த நாள் மீண்டும் மீண்டும் வரவும், பலப் பல மகிழ்ச்சியை தந்து, வெற்றிகரமான நாளாக அமையவும், நீண்ட ஆயுளைப் பெற்று வாழவும் வாழ்த்துகிறேன்.
மேலும், திரைத்துறையில் இன்னும் மிக உயர்ந்த சிகரங்களை அடையவும் வாழ்த்துகிறேன்.”
இவ்வாறு வைகோ வாழ்த்தினார்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
12.12.2025
