நல்லக்கண்ணு அனுபவிக்காத துயரங்களே இல்லை - வைகோ உருக்கம்

நல்லக்கண்ணு அனுபவிக்காத துயரங்களே இல்லை - வைகோ உருக்கம்

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு அனுபவிக்காத துயரங்களே இல்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். நல்லக்கண்ணு உடலுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்திய அவர், “மக்களுக்காக துன்பமும் துயரமும் நிறைந்த அடக்கு முறையை எதிர்த்து, சிறையில் அடைக்கப்பட்டு, சகிக்கமுடியாத கற்பனை செய்ய முடியாத சித்தரவதைகளை அனுபவித்து அனைத்தையும் தாங்கிய தலைவர்.

26 பிப்ரவரி, 2026
2 நிமிடம் படிக்க
Etv Bharat
நல்லக்கண்ணு அனுபவிக்காத துயரங்களே இல்லை - வைகோ உருக்கம்

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு அனுபவிக்காத துயரங்களே இல்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

நல்லக்கண்ணு உடலுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்திய அவர், “மக்களுக்காக துன்பமும் துயரமும் நிறைந்த அடக்கு முறையை எதிர்த்து, சிறையில் அடைக்கப்பட்டு, சகிக்கமுடியாத கற்பனை செய்ய முடியாத சித்தரவதைகளை அனுபவித்து அனைத்தையும் தாங்கிய தலைவர்.

சிறை வாழ்க்கையை தவ வாழ்க்கையாக ஏற்றுக் கொண்டு, கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து போராட்டங்களையும் நடத்தி பாட்டாளி மக்கள் கொடியை உயர்த்தி பிடித்தவர் நல்லக்கண்ணு.

நல்லகண்ணு என்னும் போராளிக்கு மரணம் இல்லை. அவர் வாழ்நாள் கடந்தும் வாழ்கிறார். அனைத்து காம்ரேட் வீரர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தாமிரபரணி ஆற்றங்கரையில் 100 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த ஈடு இணையற்ற வாழ்நாள் போராளி; தகைசால் தமிழர். மாணவர் பருவத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார். 18 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.

செங்கோடி ஏந்தி அவர் நடத்திய போராட்டங்கள் மூலம் 7 ஆண்டுகள் சிறை சென்றார். தொடர்ந்து 2 ஆண்டுகள் சிறையில் இருந்தார். சிறையில் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு கொடுமைகளை அனுபவித்தார்.

அவரது மீசையை காவலர்கள் பிடிங்கினர். அவரே இதனை என்னிடம் சொல்லி உள்ளார். தொழிலாளர் வர்க்கத்தின் அத்தனை போராட்டங்களிலும் பங்கேற்றார். சாதி கலவரத்தில் அவரது மாமனார் படுகொலை செய்யப்பட்ட போதும். போராட்டங்களில் கலந்து கொண்டவர்.

மேடைகளில் பேசும் போது எதையும் பார்த்து பேசமாட்டார். 2008 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய உண்ணவிரத போராட்டங்களில் கலந்து கொண்டார். அவர் புரட்சியாளர். எனது தாயார் உடல்நிலையில் அக்கரை கொண்டு எனது வீட்டிற்கு நேரடியாக வந்தவர். அவருக்கு மரணம் இல்லை.

அந்த புரட்சியாளர் காலத்தை கடந்து வாழ்கிறார். கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களில் மனதில் நிலைத்திருக்கிறார். பல போராட்டங்களில் முன் நின்றவர் நம்முடன் இப்போது இல்லை என்றாலும், இனி வரும் போராட்டங்களை அவர் வழிநின்று தோழர்கள் நடத்துவார்கள்.

அது நமக்கு ஊக்கத்தை தரும். என்றும் ஓளியாக இருந்து காலகத்தை கடந்து வாழ்ந்து வருகிறார். மருத்துவமனையில் அவரை வணங்கியவாறு உங்கள் உயிர் பறவை போகலாம். இந்த நேரத்தில் உங்களிடம் இருந்த உறுதி தியாகம் எனக்கும் வேண்டும் என கேட்டுக்கொண்டேன்.

அந்த பலத்தை எனக்கும் தர வேண்டும் என கேட்பேன். இவரால் அரசு மரியாதைக்கு மரியாதை. தகைசால் தமிழர் விருதுக்கு இவரால் மரியாதை. மறைந்த போதும் தனது உடல் மற்ற நோயாளிகளுக்கு பயன்பட வேண்டும் என மருத்துவமனைக்கு ஒப்படைந்துவிட்டார்.

அரசியலுக்கு யார் வந்தாலும், அவர்கள் பின்பற்ற வேண்டிய தலைவர் நல்லக்கண்ணு. மொத்த வாழ்க்கையை இயக்கத்திற்காக செலவிட்டவர். அவர் எங்கள் நெஞ்சில் ஔிவீசிக்கொண்டே இருப்பார். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் மதிமுக சார்பாக கண்ணீர் அஞ்சலியை தெரிவித்து கொள்கிறேன். அவரது புகழ் நீண்டு வாழ்க,” என்று தெரிவித்தார்.

செய்தித்தாள் படம்

Newspaper clipping

பகிர்