கலைஞர் கருணாநிதி இறுதி காலத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வீட்டு சிறையில் வைத்திருந்தார் என்று எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் பிரச்சாரத்தில் பேசியிருந்தார். அவருடைய இந்த கருத்துக்கு முதல்வர் பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இபிஎஸ் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலுக்காக தீவிர பரப்புரையில் முதல்வர் மு.க. ஸ்டாலினும், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி யும் ஈடுபட்டு வருகின்றனர். இருவரும் மாறி மாறி குற்றசாட்டுக்களை முன்வைத்து வருவது, அதற்கு பதிலடி கொடுப்பது என அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. இதனிடையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி குறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்து சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. அவரின் பேச்சுக்கு எதிர்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன.
எடப்பாடி பழனிசாமி பரப்புரை
கடந்த சில நாட்களாக அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அந்த வகையில் தருமபுரியில் அதிமுக வேட்பாளர் பாலக்கோடு அன்பழகனை ஆதரித்து பேசுகையில் முதல்வர் ஸ்டாலினையும், திமுக ஆட்சியையும் விமர்சித்து பேசியிருந்தார். அதோடு கலைஞர் கருணாநிதியின் இறுதி காலத்தில் அவரை சிறை வைத்திருந்தார் ஸ்டாலின்.
வைகோ கண்டனம்
கட்சியை கைப்பற்றி விட்டார் என எல்லை மீறி பேசியிருந்தார். அவருடைய இந்த கருத்துக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக அவர் பேசுகையில், "திமுக தலைவர் ஸ்டாலின் கண்ணை இமை போல் காப்பதை போன்று கலைஞர் கருணாநிதியை பாதுகாத்தார். மோடியின் நிரந்தர கொத்தடிமையான எடப்பாடி பழனிசாமி ஆலகால நஞ்சை கக்கி, அபாண்டமாக பழியை சுமத்தியுள்ளார். திருமணமான ஐந்தாவது மாதத்திலே மிசா சட்டத்தில் கைதாகி சிறையில் கடும் கொடுமைக்கு உள்ளானார் ஸ்டாலின்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலடி
தியாக பிம்பமான அவர் அல்லும், பகலும் பாடுபட்டு முதல்வர் பதவிக்கு புகழ் மகுடம் சூடினார். இப்படி அவதூறு கருத்துகளை பழனிசாமி கூறி வந்தால், என் தாக்குதல்களால் அரசியல் களத்தில் இருந்து அவர் ஓட நேரிடும். இவ்வாறு வைகோ கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இதனிடையில் திருநெல்வேலியில் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், தேர்தல் தோல்வி பயத்தால் எல்லை மீறி பேசி வருகிறார்.
கலைஞர் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை
எனக்கு உயிர் கொடுத்து ஆளாக்கிய தலைவர் கலைஞரை, நானே வீட்டுச் சிறையில் வைத்திருந்ததாக நாக்கில் நரம்பில்லாமல உளறுகிறார். எதிர்க்கட்சி தலைவரான உங்களுக்கு முதலமைச்சர் செயல்பாட்டை விமர்சிப்பதற்கு முழு உரிமை உள்ளது. ஆனால் கலைஞரை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் கிடையாது. சிங்கம் போன்ற அவரை யாராலும் சிறைப்படுத்த முடியாது. அவருடைய இதயச் சிறையில் தான் இங்கே கூடியுள்ள லட்சக்கணக்கான உடன்பிறப்புகளும், நானும் குடி இருக்கிறோம்.
இவ்வாறு கலைஞர் கருணாநிதி பற்றிய இபிஎஸ் விமர்சனத்துக்கு கடுமையாக பதிலடி கொடுத்தார் முதல்வர். இதனிடையில் தற்போது வைகோவும் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதனிடையில் மறைந்த தலைவர்கள் பற்றி இதுபோன்று விமர்சனங்களை முன்வைப்பதை தவிர்க்கலாம் என இணையத்தில் பலரும் கருத்து வருகின்றனர். அதே போல் இறுதி காலத்தில் கலைஞர் கருணாநிதியை, மு.க. ஸ்டாலின் கவனித்துக்கொண்ட வீடியோக்களையும் திமுக ஆதரவாளர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
