நோபல் பரிசு கொடுக்கலாம்: திருமாவளவனை கிண்டலடித்த வைகோ - என்ன காரணம்?
செய்திகள்சிறப்பு கட்டுரை

நோபல் பரிசு கொடுக்கலாம்: திருமாவளவனை கிண்டலடித்த வைகோ - என்ன காரணம்?

விசிக தலைவர் திருமாவளவன் நேற்றைய தினம் திமுகவுடனான நட்பு தொடர்வதாக கருத்து ஒன்றினை தெரிவித்து இருந்தார். அவருடைய இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை கிளப்பியது. இந்நிலையில் திருமாவளவன் பேச்சு குறித்து மதிமுக வைகோ கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார்.

8 ஜூலை, 2026
2 நிமிடம் படிக்க
The Times of India samayam
நோபல் பரிசு கொடுக்கலாம்: திருமாவளவனை கிண்டலடித்த வைகோ - என்ன காரணம்?

விசிக தலைவர் திருமாவளவன் நேற்றைய தினம் திமுகவுடனான நட்பு தொடர்வதாக கருத்து ஒன்றினை தெரிவித்து இருந்தார். அவருடைய இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை கிளப்பியது. இந்நிலையில் திருமாவளவன் பேச்சு குறித்து மதிமுக வைகோ கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்றைய தினம் தெரிவித்த கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை கிளப்பியது. தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சரவையில் இடம்பெற்று இருந்தாலும், திமுகவுடன் நட்பு தொடர்வதாக அவர் கூறியிருந்தார். திருமாவளவனின் இந்த கருத்து தவெக கூட்டணியில் சலசலப்பினை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவருடைய பேச்சு குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

அதாவது விசிக தலைவர் சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்பாக மாறி மாறி பேசு வருவதாக அரசியல் வட்டாரத்தில் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையில் நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய அவர் திமுக கூட்டணியில் நாங்கள் இருந்தோம். இப்போதும் திமுகவுடனான நட்பு தொடர்கிறது. விசிக தவெக கூட்டணியில் இல்லை. அதுக்குறித்து பரிசீலிப்போம் என கருத்து தெரிவித்து இருந்தார். அவருடைய இந்த பேச்சு தவெக கூட்டணியில் சலசலப்பினை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் வார்த்தைகளில் விளையாட வேண்டாம் என திருமாவளவனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதாவது தவெக ஆட்சி அமைப்பதற்காக விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. அதோடு அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளன. இன்னமும் கூட்டணிக்கு பெயர் வைப்பது மட்டுமே மிச்சம் என தெரிவித்தார். எனவே வார்த்தைகளில் விளையாட வேண்டாம் என கருத்து கூறினார்.

இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திருமாவளவனின் பேச்சினை கிண்டல் அடித்துள்ளார். அதாவது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், தவெக அமைச்சரவையில் விசிக பங்கேற்று இருந்தாலும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் கருத்து பங்கேற்பு தொடர்ந்து இருந்துக் கொண்டு இருந்தது என பேசியுள்ளார். இதுக்குறித்து என்ன உங்களுடைய கருத்து என்ன என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டிய கருத்து என கிண்டலாக பதிலளித்தார்.

செய்தித்தாள் படம்

Newspaper clipping

பகிர்