திமுகவுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை..குழு அமைத்த மதிமுக

திமுகவுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை..குழு அமைத்த மதிமுக

இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி ஒருபக்கம் தேசிய ஜனநாயக கூட்டணி மறுபக்கம் என பலத்த போட்டி இருக்கும் என தெரிகின்றது. அதே சமயம் சீமானின் நாம் தமிழர் கட்சி ,விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் போன்ற கட்சிகளும் களத்தில் தீவிரமாக இறங்கியிருக்கின்றனர்.

21 February 2026
1 min read
The Times of India samayam
திமுகவுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை..குழு அமைத்த மதிமுக

சட்டமன்ற தேர்தல் வேலைகள் பரபரப்பாக போய்க்கொண்டு இருக்கும் நிலையில் ஒவ்வொரு கட்சியும் கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி ஒருபக்கம் தேசிய ஜனநாயக கூட்டணி மறுபக்கம் என பலத்த போட்டி இருக்கும் என தெரிகின்றது. அதே சமயம் சீமானின் நாம் தமிழர் கட்சி ,விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் போன்ற கட்சிகளும் களத்தில் தீவிரமாக இறங்கியிருக்கின்றனர்.

எனவே இந்த சட்டமன்ற தேர்தலில் வழக்கத்தை விட பலத்த போட்டி இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையில் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் தொகுதி பங்கீடு குறித்தான பேச்சுவார்த்தையை விரைவில் துவங்கவுள்ளனர். சமீபத்தில் தான் காங்கிரஸ் கட்சியினர் அடுத்த வாரம் திமுகவுடன் கூட்டணி தொடர்பாகவும் தொகுதி பங்கீடு தொடர்பாகவும் குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்த போவதாக அறிவித்தனர்.

Share this article