மாணவர்கள் போராட்டத்தை அடக்க நினைத்தால் புரட்சி வெடிக்கும்: வைகோ எச்சரிக்கை

மாணவர்கள் போராட்டத்தை அடக்க நினைத்தால் புரட்சி வெடிக்கும்: வைகோ எச்சரிக்கை

மாணவர்கள் போராட்டத்தை அடக்க நினைத்தால் புரட்சி வெடிக்கும்: வைகோ எச்சரிக்கை

23 July 2026
1 min read
Dinakaran
மாணவர்கள் போராட்டத்தை அடக்க நினைத்தால் புரட்சி வெடிக்கும்: வைகோ எச்சரிக்கை

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், நீட் கேள்வி தாள் வெளியானதற்கு காரணமான ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலக கோரியும் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 20ம் தேதி லட்சக்கணக்கான மாணவர்களும், கரப்பான் பூச்சி இயக்கத்தினரும் அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் காவல்துறை குண்டாந்தடிகளை கொண்டு போராட்டக்காரர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தியது. கண்ணீர் புகை பிரயோகிக்கப்பட்டது. பல மாணவ, மாணவிகள் படுகாயமுற்றனர். டெல்லி நகரம் ஒரு ராணுவ கூடாரம் போல் காட்சி அளித்தது. கரப்பான் பூச்சி இயக்கத்தினரும், எண்ணற்ற இளைஞர்களும் இப்போராட்டத்தில் எதற்கும் அஞ்சாமல் உறுதியாக நின்று போராடுகிறார்கள்.

இப்போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை தெரிவிப்பதுடன், ஒன்றிய அரசுக்கும், டெல்லி மாநில அரசுக்கும், காவல்துறைக்கும் வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதோடு, உரிமைக்காக, நியாயத்திற்காக, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதற்காக கிளர்ந்தெழும் போராட்டத்தை காவல்துறையை கொண்டும், துணை ராணுவத்தை கொண்டும் அடக்க முனைந்தால் அது புரட்சியாக வெடிக்கும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Newspaper Clipping

Newspaper clipping

Share this article