ஞானபீட விருது பெறும் கவிப்பேரரசு வைரமுத்து!  வைகோ வாழ்த்து

ஞானபீட விருது பெறும் கவிப்பேரரசு வைரமுத்து! வைகோ வாழ்த்து

ஞானபீட விருது பெறும் கவிப்பேரரசு வைரமுத்து! வைகோ வாழ்த்து

13 ஜூலை, 2026
1 நிமிடம் படிக்க
ஞானபீட விருது பெறும் கவிப்பேரரசு வைரமுத்து!  வைகோ வாழ்த்து

ஞானபீட விருது பெறும் கவிப்பேரரசு வைரமுத்து!

வைகோ வாழ்த்து

மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இன்று இந்திய அரசின் ஞானபீட விருது பெற உள்ள கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சந்தித்து,

“உங்களுக்கு இன்று பிறந்த நாள். இந்த நாள் இன்னும் எண்ணற்றப் பிறைகளைக் காணும் வகையில் நீங்கள் முழுமையான உடல்நலனோடும், கவிதையும், காவியமும் படைக்கும் ஆற்றலோடு நெடுங்காலம் வாழ நெஞ்சார வாழ்த்துகிறேன்

உங்களுக்கு விருது வழங்கப்பட்டதன் மூலம் ஞானபீட விருதுக்கு புதிய மரியாதையும், பெருமையும் சேர்க்கப்பட்டிருக்கிறது என்று கூறி பொன்னாடை அணிவித்து, பூங்கொத்து வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
13.07.2026

செய்தித்தாள் படம்

Newspaper clipping

பகிர்