தேமுதிக வருகை! காங்கிரஸ் குடுமிப்பிடி சண்டையை திமுக பொருட்படுத்தாது -வைகோவின் நச் பதில்
செய்திகள்சிறப்பு கட்டுரை

தேமுதிக வருகை! காங்கிரஸ் குடுமிப்பிடி சண்டையை திமுக பொருட்படுத்தாது -வைகோவின் நச் பதில்

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததை அடுத்து, மதுரையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் அளித்த பேட்டியில், தமிழக அரசியல் களத்தில் தற்போது நிலவி வரும் சூழலை மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. குறிப்பாக, தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்திருப்பதை அவர் "தித்திக்கும் செய்தி" என்று வர்ணித்திருப்பது, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி எவ்வளவு பெரிய பலத்துடன் களம் காணப் போகிறது என்பதற்கான ஒரு முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.

19 பிப்ரவரி, 2026
1 நிமிடம் படிக்க
Zee Tamil News
தேமுதிக வருகை! காங்கிரஸ் குடுமிப்பிடி சண்டையை திமுக பொருட்படுத்தாது -வைகோவின் நச் பதில்

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததை அடுத்து, மதுரையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் அளித்த பேட்டியில், தமிழக அரசியல் களத்தில் தற்போது நிலவி வரும் சூழலை மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. குறிப்பாக, தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்திருப்பதை அவர் "தித்திக்கும் செய்தி" என்று வர்ணித்திருப்பது, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி எவ்வளவு பெரிய பலத்துடன் களம் காணப் போகிறது என்பதற்கான ஒரு முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது. திமுக மற்றும் தேமுதிக கூட்டணி குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் என்ன கூறினார்? என்பதைக் குறித்து தெரிந்துக்கொள்ளுவோம்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி

மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற்ற மண்டல வாரிய தேர்தல் நிதி திரட்டும் கூட்டத்தில் பங்கேற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, செய்தியாளர்களிடம் பேசுகையில் தனது அரசியல் அனுபவ முதிர்ச்சியையும், கூட்டணி தர்மத்தையும் ஒருசேர வெளிப்படுத்தினார்.

திமுக கூட்டணி பலம்

வைகோவின் பேச்சில் பிரதானமாக இருந்தது திமுக கூட்டணியின் அசைக்க முடியாத நம்பிக்கைதான். ஏற்கனவே வலுவாக இருந்த திமுக கூட்டணி, தற்போது தேமுதிகவின் வருகையால் இன்னும் கூடுதல் பலம் பெற்றுள்ளதாகவும், 234 தொகுதிகளிலும் தங்களது கூட்டணியே அமோக வெற்றி பெறும் என்றும் அவர் மிக உறுதியாகக் குறிப்பிட்டார்.

ஆட்சிக்கு இடமில்லை 

"திமுக தனது தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும், கூட்டணி கட்சிகள் அந்த அரசுக்கு உற்ற துணையாகவும் பக்கபலமாகவும் இருக்கும்" என்று கூறியதன் மூலம், ஆட்சி அதிகாரப் பகிர்வு குறித்த யூகங்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதாவது கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை என்பதை தெளிவாக கூறினார்.

தொகுதிப் பங்கீடு குறித்து மதிமுக எத்தனை இடங்களில் போட்டியிடும் என்ற கேள்விக்கு, திமுகவுடன் பேச்சுவார்த்தை குழு கலந்து ஆலோசித்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று யதார்த்தமாகப் பதிலளித்தார். 

செய்தித்தாள் படம்

Newspaper clipping

பகிர்