குடும்ப வாழ்வில் ஒழுக்கமில்லாதவர்கள் வேட்பாளராகலாமா? வைகோ கேள்வி! யாரை சொல்கிறார்?

குடும்ப வாழ்வில் ஒழுக்கமில்லாதவர்கள் வேட்பாளராகலாமா? வைகோ கேள்வி! யாரை சொல்கிறார்?

திருப்பத்தூர் தொகுதியில் வேட்பாளர் தேர்வு சம்பந்தமாக அவர் கூறியிருப்பதாவது: ஒழுக்கமான குடும்ப வாழ்க்கை இல்லாதவர்கள் அரசியல் வேட்பாளராக தகுதியற்றவர்கள். குடும்ப ஒழுக்கம் இல்லாதவர்களை வேட்பாளராக நிறுத்துவது சரியா? அமெரிக்காவில் தன் மனைவி, குழந்தைகளுடன் வாழ்க்கை நடத்துபவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்.

13 மார்ச், 2026
1 நிமிடம் படிக்க
Oneindia
குடும்ப வாழ்வில் ஒழுக்கமில்லாதவர்கள் வேட்பாளராகலாமா? வைகோ கேள்வி! யாரை சொல்கிறார்?

திருப்பத்தூர் தொகுதியில் வேட்பாளர் தேர்வு சம்பந்தமாக அவர் கூறியிருப்பதாவது: ஒழுக்கமான குடும்ப வாழ்க்கை இல்லாதவர்கள் அரசியல் வேட்பாளராக தகுதியற்றவர்கள்.

குடும்ப ஒழுக்கம் இல்லாதவர்களை வேட்பாளராக நிறுத்துவது சரியா? அமெரிக்காவில் தன் மனைவி, குழந்தைகளுடன் வாழ்க்கை நடத்துபவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்.

இத்தனைக்கு அமெரிக்காவில் ஒரு permissive society (தனி நபர் உரிமை, பாலியல் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் சுதந்திரம், விவாகரத்து, வாழ்க்கை முறை தேர்வு) இருக்கிறது. அங்கு பிடித்தால் சேர்ந்து வாழ்வார்கள். இல்லாவிட்டால் விவாகரத்து பெற்றுக் கொள்வார்கள், அல்லது பிரிந்து விடுவார்கள்.

கடந்த 2004 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு போன போது ஜனநாயக கட்சியின் தலைமையகத்திற்கும் குடியரசு கட்சியின் தலைமையகத்திற்கும் சென்றிருந்தேன். அங்கு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வரிசையாக வந்து நின்றார்கள்.

ஒவ்வொருவரும் 3 நிமிடங்கள் மட்டுமே பேச வேண்டும். அங்கு தொகுதிக்குள்பட்ட வாக்காளர்கள் இருப்பார்கள். கொடுத்த 3 நிமிடத்தில் அவர்கள் என்ன பேசுகிறார்கள் தெரியுமா? "நான் ஒரு நல்ல குடும்பத்தை நடத்தி வருகிறேன்.

நான் என் மனைவி, மக்களுடன் ஒழுங்கான ஒரு இல்லற வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன்." இதை மட்டும்தான் பேசுகிறார்கள். அப்படியென்றால் வாக்காளர்கள் ஒழுக்கமான வாழ்க்கையை வேட்பாளர்கள் வாழ்கிறார்களா என்பதைத்தான் முக்கியமாக பார்க்கிறார்கள்.

அதிபர் தேர்தல் வேட்பாளராக போகிறவர்கள் என சொல்லும் 4 பேர் , அவர்களின் பெயர்கள் நினைவில்லை. அவர்கள் 4 பேரும், ஒழுக்கமற்ற வாழ்க்கையை வாழ்ந்ததாக ஆதாரம் காட்டப்பட்டதை அடுத்து அவர்கள் அதிபர் வேட்பாளராகும் வாய்ப்பையே இழந்தார்கள்.

வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அது போல் 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும் ஒரு தொகுதியில் தனி சின்னத்திலும் போட்டியிட போகிறது. இந்த நிலையில் வேட்பாளர் தேர்வு எப்படி இருக்க வேண்டும் என அவர் பேசியிருப்பது வைரலாகி வருகிறது.



 

செய்தித்தாள் படம்

Newspaper clipping

பகிர்