மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திங்கட்கிழமை காலை திருவனந்தபுரத்தில் உள்ள கேரள சட்டப்பேரவை வளாகம் வளாகத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களை நேரில் சந்தித்தார்.
காலை சுமார் 10.15 மணியளவில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாம் ஆற்றிய உரைகளின் தொகுப்புகளை முதலமைச்சரிடம் வழங்கிய வைகோ, அவற்றிற்கு முன்னுரை எழுதி தருமாறு கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து மதிமுக வெளியிட்ட அறிக்கையில், இந்த கோரிக்கைக்கு மகிழ்ச்சி தெரிவித்த முதலமைச்சர், விரைவில் முன்னுரை வழங்குவதாக உறுதியளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
