மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் வெள்ளிக்கிழமை சென்னைில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, நாடாளுமன்றத்தில் தாம் ஆற்றிய உரைகள் பல ஆயிரம் பக்கங்களாக தொகுக்கப்பட்டுள்ள ஐந்து தொகுதி நூல்களுக்கு முன்னுரை எழுதுமாறு கேட்டுக்கொண்டார். வைகோ, மாநிலங்களவையிலும் மக்களவையிலும் உறுப்பினராக பணியாற்றியவர்.
மேலும், இந்நூல் தொகுப்புகளுக்கு தமது குறிப்புகளை வழங்குமாறு தி ஹிந்து முன்னாள் முதன்மை ஆசிரியர் என். ராம் அவர்களிடமும் கேட்டுக்கொண்டதாக வைகோ தெரிவித்தார்.
