MDMK | மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்..? - வைகோ அறிவிப்பு

MDMK | மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்..? - வைகோ அறிவிப்பு

நான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வேட்பாளர்களையும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அறிமுகப்படுத்தினார்.

28 மார்ச், 2026
1 நிமிடம் படிக்க
News 18 Tamil nadu
MDMK | மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்..? - வைகோ அறிவிப்பு

நான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வேட்பாளர்களையும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அறிமுகப்படுத்தினார்.

தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.கவிற்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இன்று சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நான்கு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளரை பட்டியலை அறிவித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி அங்கம் வகிக்கும் மதிமுகவிற்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த நான்கு தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பங்களை பெற்றோம், அதன் பின் நபர்களை தேர்ந்தெடுத்து தொகுதி நிலவரம் மற்றும் அவர்களுடைய நிலைமை பற்றி கேட்டிருந்தோம், அதன் அடிப்படையில்… மொடக்குறிச்சி -செந்தில்நாதன் உதயசூரியன் சின்னத்தில், மதுரை தெற்கு -  பூமிநாதன் உதயசூரியன் சின்னத்தில்… கடையநல்லூர் - திமு ராஜேந்திரன் உதயசூரியன் சின்னத்தில், சீர்காழி (தனி) - செந்தில் செல்வன் தனி சின்னத்தில் போட்டியிட உள்ளனர். 

பகிர்