‘எடப்பாடி பழனிசாமிக்கு முதல்-அமைச்சர் நாற்காலி என்பது கேள்விக்குறிதான்’ - வைகோ

‘எடப்பாடி பழனிசாமிக்கு முதல்-அமைச்சர் நாற்காலி என்பது கேள்விக்குறிதான்’ - வைகோ

சென்னையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- “சூரியன் எப்போதும் மறையாது. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளதால் அ.தி.மு.க.வுக்கு மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு முதல்-அமைச்சர் நாற்காலி என்பது கேள்விக்குறிதான்.

23 ஜனவரி, 2026
1 நிமிடம் படிக்க
Daily Thanthi
‘எடப்பாடி பழனிசாமிக்கு முதல்-அமைச்சர் நாற்காலி என்பது கேள்விக்குறிதான்’ - வைகோ

சென்னையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

“சூரியன் எப்போதும் மறையாது. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளதால் அ.தி.மு.க.வுக்கு மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு முதல்-அமைச்சர் நாற்காலி என்பது கேள்விக்குறிதான்.

உள்துறை அமைச்சர் கூட திராவிட இயக்கம் இருக்காது என பேசுகிறார், இது வரம்பு மீறல். விஜய் தலைமையிலான த.வெ.க.வின் தாக்கம் என்ன என்பது தேர்தலுக்கு பிறகே தெரியும். அப்போது பார்க்கலாம்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

செய்தித்தாள் படம்

Newspaper clipping

பகிர்