ஆட்சியில் பங்கு வேண்டாம் என்கிறார் வைகோ
மதுரை: போதையில்லா தமிழ்நாட்டை வலியுறுத்தி நடைபயணம் மேற் கொண்டுள்ள மு.க.பொதுச்செயலாளர் வைகோ, நேற்று மதுரை மாவட்டம் கருங்காலக்குடியில் அளித்த பேட்டி.
அமைதி பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டில் வன்முறைத்துவா சக்திகள் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. வியர்வை, ரத்தம் சிந்தி அண்ணா, கருணாநிதி கட்டி காத்த திராவிடக் கோட்டை தமிழகம்.
ம.தி.மு.க., சார்பில், ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு என்று தப்பி தவறி ஒரு சொல் கூட பேசியது கிடையாது. நேற்று வரையிலும் இந்த கோரிக்கையை வைக்கவில்லை; இனியும் வைக்க மாட்டோம்.
இவ்வாறு கூறினார்.
