மதிமுக தலைவர் வைகோவும், விசிக தலைவர் திருமாவளவனும் கூட்டணி கட்சிகளுடன் நடக்கும் விஷயங்களில் "லக்ஷ்மண் ரேகை"யை மதிக்குமாறு தங்களது எம்.பிக்களுக்கு வழிககாட்ட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்திருந்த நிலையில், லட்சுமண ரேகையை தாண்டும் பழக்கம் தங்களுக்கு கிடையாது என வைகோ தெரிவித்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு இன்று செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் தாகூரின் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வைகோ, 'லட்சுமண ரேகையைதாண்டும் பழக்கம் எங்களுக்கு கிடையாது. நாங்கள் எங்கள் எல்லையை தாண்டவில்லை. கூட்டணி தர்மம் தழைப்பதற்கும், தலைமையை மதித்து செயல்படுவதற்கும் இலக்கணமாக திகழும் கட்சி மதிமுக. கூட்டணியில் இருக்கும் கட்சிகளை விமர்சிக்கும், புண்படுத்தும் வகையில் நாங்கள் எந்த கருத்தையும் கூறமாட்டோம்.' என தெரிவித்தார்.
'லட்சுமண ரேகையை தாண்டும் பழக்கம் எங்களுக்கு கிடையாது' - மாணிக்கம் தாகூருக்கு வைகோ பதிலடி!