தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இணைந்தது பலம்: வைகோ

தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இணைந்தது பலம்: வைகோ

தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இணைந்தது பலமாக அமைந்துள்ளது என திருநெல்வேலியில் ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ தெரிவித்தார். ம.தி.மு.க., மண்டல தேர்தல் நிதி மற்றும் கழக வளர்ச்சி நிதி வழங்கும் விழா திருநெல்வேலி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது.

22 February 2026
2 min read
Dinamalar
தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இணைந்தது பலம்: வைகோ

தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இணைந்தது பலமாக அமைந்துள்ளது என திருநெல்வேலியில் ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ தெரிவித்தார்.

ம.தி.மு.க., மண்டல தேர்தல் நிதி மற்றும் கழக வளர்ச்சி நிதி வழங்கும் விழா திருநெல்வேலி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது.

துணை பொது செயலாளர் தி.மு.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ. நிஜாம் வரவேற்றார். பொது செயலாளர் வைகோ, அவை தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ், பொருளாளர் செந்திலதிபன் ஆகியோர் நிதியைப் பெற்றனர். திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளடக்கிய கட்சி ரீதியிலான 10 மாவட்டங்கள் சார்பில் ரூ.ஒரு கோடியே 80 லட்சத்து 66 ஆயிரம் தேர்தல் நிதி வழங்கப்பட்டது.

மாவட்ட செயலாளர்கள் நிஜாம், ரைமண்ட், சுதா பாலசுப்பிரமணியன், உதயசூரியன், ஆர்.எஸ். ரமேஷ், ரஞ்சன், வெற்றிவேல், வேல்முருகன், ரவிச்சந்திரன், கண்ணன் தலைமையில் நிதி வழங்கப்பட்டது. சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., ரகுராமன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி.சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் திவான், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ராணி செல்வின், மாநில செய்தி தொடர்பாளர் முகமது அலி கலந்து கொண்டனர்.

பின்னர் வைகோ கூறியதாவது:

கூட்டணியில் ம.தி.மு.க.,க்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இணைந்துள்ளது பலமாக அமைந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அரசியல் அனுபவம் மிக்கவர்.

பிரதமர் மோடி திருக்குறளை முன்னிறுத்தி தமிழகத்தில் ஆட்சியைக் பிடிக்கலாம் என நினைப்பது நடக்காது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மிகுந்த பக்குவம் கொண்ட தலைவர். அதேபோல் அத்வானி மதச்சார்பின்மையை ஆதரிப்பதாக தைரியமாக கூறியவர்.

நான் பார்லிமெண்டில் 1360 முறை பேசியுள்ளேன். அவற்றை 5 தொகுப்புகளாக புத்தகமாக வெளியிட்டு முக்கிய தலைவர்களை சந்தித்து வழங்கி வருகிறேன்.

'வந்தே மாதரம்' பாடலில் நீக்கப்பட்ட 4 வரிகளை மீண்டும் சேர்க்க தேவையில்லை. 'இந்தியா' என்பதை 'பாரத்' என மாற்றும் முயற்சி நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும். டில்லியை வாரணாசிக்கு மாற்றும் முயற்சியும் அபாயகரமானது. இதனை அனைத்து மாநிலங்களும் எதிர்க்க வேண்டும் என்றார்.

Newspaper Clipping

Newspaper clipping

Share this article