“நல்லகண்ணுவுக்கு நினைவு இல்லை; தீவிர சிகிச்சையில் இருக்கிறார்” – வைகோ

“நல்லகண்ணுவுக்கு நினைவு இல்லை; தீவிர சிகிச்சையில் இருக்கிறார்” – வைகோ

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சென்று விசாரித்தார்.

24 February 2026
1 min read
News 18 Tamil nadu
“நல்லகண்ணுவுக்கு நினைவு இல்லை; தீவிர சிகிச்சையில் இருக்கிறார்” – வைகோ

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்துசென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சென்று விசாரித்தார்.

மருத்துவமனையில் உள்ள நல்லகண்ணு குடும்பத்தாரிடமும், மருத்துவர்களிடமும் அவரின் உடல்நிலை குறித்து வைகோ கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது; “பொதுவுடைமை கட்சியில் சிறுவயதில் இருந்தே தன்னை இணைத்துக் கொண்டு பல ஆண்டுகள் சிறைகளிலும், சில ஆண்டுகள் தலைமறைவாகவும் இருந்து இருக்கிறார்.

பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு அதை அனைத்தையும் தாங்கிக் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டார். தொழிலாளர் வர்க்கத்தின் அனைத்து போராட்டங்களில் கலந்து கொண்டவர். நல்ல படிப்பாளி அவர், ஒரு புத்தக நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்றால் அதற்கு முன்னே அந்த புத்தகத்தைப் படித்து தான் அந்த நிகழ்ச்சிக்கு செல்வார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சென்று விசாரித்தார்.

Share this article