மதிமுகவில் நாளை விருப்ப மனு விநியோகம் – வைகோ அறிவிப்பு!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “2026 ஏப்ரல் 23 அன்று நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு தலைமை தாங்கும் திமுக ஒதுக்கீடு செய்துள்ள தொகுதிகளில் வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் கழகக் கண்மணிகள் 27.03.2026 ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை ஆயிரம் ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

26 March 2026
1 min read
News 7 Tamil

பொதுத் தொகுதிக்கு 25 ஆயிரம் ரூபாய் கட்டணத்தையும், தனித் தொகுதிக்கு 10 ஆயிரம் ரூபாய் கட்டணத்தையும் பிற்பகல் 3 மணிக்குள்ளாக அமைப்புச் செயலாளர் சு.குருநாதனிடம் வழங்க வேண்டும். பிற்பகல் 3.30 மணி அளவில், ஆட்சி மன்றக் குழுவினர் முன்னிலையில் வேட்பாளர்களின் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அதில் தேர்ந்தெடுக்கப்படும் பெயர்கள் உடனடியாக அறிவிக்கப்படும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newspaper Clipping

Newspaper clipping

Share this article