வைகோ பெருந்தன்மையோடு எடுத்துள்ள முடிவை நன்றியோடு வரவேற்கிறேன்! - மு.க.ஸ்டாலின்

வைகோ பெருந்தன்மையோடு எடுத்துள்ள முடிவை நன்றியோடு வரவேற்கிறேன்! - மு.க.ஸ்டாலின்

2026, ஏப்ரல் திங்களில் நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள மறுமலர்ச்சி தி.மு.கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்றான வழசீர்காழி (தனி) தொகுதியிலும் கழக வேட்பாளர்க்கறிஞர் ரா.செந்தில்செல்வன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பதை தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கிறேன்.

1 April 2026
1 min read
Daily Thanthi
வைகோ பெருந்தன்மையோடு எடுத்துள்ள முடிவை நன்றியோடு வரவேற்கிறேன்! - மு.க.ஸ்டாலின்

ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்ட 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

2026, ஏப்ரல் திங்களில் நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள மறுமலர்ச்சி தி.மு.கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்றான வழசீர்காழி (தனி) தொகுதியிலும் கழக வேட்பாளர்க்கறிஞர் ரா.செந்தில்செல்வன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பதை தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனி சின்னத்தை கேட்டு பெறுவதில் தாமதம் நிலவுவதால், தேர்தல் நெருங்கும் சூழலில் சின்னத்தை அறிமுகம் செய்து பிரசாரம் செய்வது கடினமாக இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி 176 தொகுதிகளில் 'உதயசூரியன்' சின்னம் களம் காண உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வைகோவிற்கு நன்றிகளை தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது :-

ஆருயிர் அண்ணன் வைகோ பெருந்தன்மையோடு எடுத்துள்ள இந்த முடிவை நன்றியோடு வரவேற்கிறேன்!.. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெல்க!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newspaper Clipping

Newspaper clipping

Share this article