பல பேரின் தியாகத்தில் வளர்ந்த கட்சி திமுக.. அழிக்கவே முடியாது - அண்ணாமலைக்கு வைகோ பதிலடி!

பல பேரின் தியாகத்தில் வளர்ந்த கட்சி திமுக.. அழிக்கவே முடியாது - அண்ணாமலைக்கு வைகோ பதிலடி!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சீர்காழி சட்டமன்ற தொகுதியின் மதிமுக வேட்பாளர் செந்தில் செல்வனை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசுகையில், திமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.பிள்ளைகளுக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்படுகின்ற திட்டமும் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கிடையாது .

18 April 2026
1 min read
The Times of India samayam
பல பேரின் தியாகத்தில் வளர்ந்த கட்சி திமுக.. அழிக்கவே முடியாது - அண்ணாமலைக்கு வைகோ பதிலடி!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சீர்காழி சட்டமன்ற தொகுதியின் மதிமுக வேட்பாளர் செந்தில் செல்வனை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசுகையில், திமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.பிள்ளைகளுக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்படுகின்ற திட்டமும் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கிடையாது .

அப்படிப்பட்ட திட்டங்களை நிறைவேற்றியதோடு ஒரு கோடியே 31 லட்சம் பெண்களுக்கு மூன்று மாத கால உரிமை தொகையாக 3000 ரூபாய் கோடைகால சிறப்பு தொகையாக 2000 ரூபாய் சேர்த்து ஐந்தாயிரம் ரூபாயை இல்லத்தரசிகளின் வங்கி கணக்கினை செலுத்திய முதலமைச்சரின் சார்பில் தான் செந்தில் செல்வதிற்கு உதயசூரியனில் வாக்கு கேட்டு நான் உங்கள் முன்னால் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

நாட்டின் கோடான கோடி மக்களுடைய நல்லாசியை பெற்றிருக்கக் கூடிய நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இனி வருங்காலத்தில் என்னென்ன திட்டங்களை எல்லாம் நாங்கள் செய்து காட்டுவோம் என்று அறிவித்திருக்கின்றார் அப்படி எண்ணற்ற பல திட்டங்கள் இந்த சட்டப்பேரவை தேர்தல் அறிக்கைகளை இடம் பெற்று இருக்கின்றன மேகதாதுவில் கர்நாடக அரசு அணைகட்ட 5900 கோடி இப்பொழுது ஒதுக்கியுள்ளது.

அந்த அணைக்கட்டு கட்டப்பட்டால் காவிரிக்கு தண்ணீயே வராது அப்படிப்பட்ட பேராபத்து வருகிற போது பஞ்சபிரதேசமாக பட்டிணி பிரதேசமாகி எத்தியோப்பியாவை போல எலும்பும் தோலுமாக பிள்ளைகள் காட்சியைக் கொண்ட ஒரு கொடூரமான நோயை ஏற்படக்கூடும் என்று பயந்து நான் ஊர் ஊராக சென்று வந்தேன். கட்சியின் கொடியை கட்டிக்கொண்டு அல்ல எந்த கட்சியின் பெயரை நான் சொல்லி எங்களுடைய இயக்கத்தின் பெயரை கூடசொன்னதில்லை கடந்து சகோதரத்துவத்தோடு வாழ வேண்டிய இந்த தமிழ்நாட்டில் இந்த தமிழகத்தினுடைய எதிர்காலத்தை பாதுகாக்க நான் பாடுபடுவேன்.

Share this article