"தமிழகத்தில் ஆட்சியில் பங்கு எடுபடாது; ஏற்கப்படாது - வைகோ"

"தமிழகத்தில் ஆட்சியில் பங்கு எடுபடாது; ஏற்கப்படாது - வைகோ"

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாட்டில் இந்துத்துவா சக்திகள் ஊடுருவ அனுமதிக்கக் கூடாது என்பதற்காகத்தான் தி.மு.க. உடன் ம.தி.மு.க. கூட்டணி அமைத்து உள்ளது. எங்களது கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம். கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு கருத்தைச் சொல்லிக் கொண்டு இருக்கின்றனர்.

13 February 2026
1 min read
Daily Thanthi
"தமிழகத்தில் ஆட்சியில் பங்கு எடுபடாது; ஏற்கப்படாது - வைகோ"

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் இந்துத்துவா சக்திகள் ஊடுருவ அனுமதிக்கக் கூடாது என்பதற்காகத்தான் தி.மு.க. உடன் ம.தி.மு.க. கூட்டணி அமைத்து உள்ளது. எங்களது கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம். கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு கருத்தைச் சொல்லிக் கொண்டு இருக்கின்றனர்.

ஆட்சியில் பங்கு வேண்டும், அதிக இடங்கள் வேண்டும் என்று கேட்பது அவரவர் உரிமை. வந்தே மாதரம் பாடலை முழுமையாக ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் பாடிவிட்டு, தேசிய கீதம் பாட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் சட்ட மசோதாவை இந்த பா.ஜனதா அரசு நிறைவேற்றி உள்ளது. இது எச்சரிக்கை மணி. அடுத்து டெல்லிக்கு இந்திர பிரசாத் என்று வேறு பெயர் வைக்க வேண்டும்.

தலைநகரை வராணாசிக்கு மாற்ற வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ சக்திகளின் திட்டம் ஆகும். அதில் உள்நோக்கமும் இருக்கும். எங்களுடைய இயக்கம் தி.மு.க.வுக்கு சாட்டி முனையாக, உதவுணையாக, பக்க அரணாக செயல்படும் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் ஆட்சியில் பங்கு கேட்கிறார்கள். தனிப்பெரும்பான்மை பெற்று தி.மு.க. ஆட்சி அமைக்கும்போது இந்த கோரிக்கைகள் எல்லாம் தமிழகத்தில் எடுபடாது, ஏற்கப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

 

Newspaper Clipping

Newspaper clipping

Share this article