மேகதாது பிரச்சனைக்கு மத்திய அரசே காரணம்: வைகோ கண்டுபிடிப்பு

மேகதாது பிரச்சனைக்கு மத்திய அரசே காரணம்: வைகோ கண்டுபிடிப்பு

மேகதாது அணை விவகாரத்தில் மத்திய 'வில்லன்' மத்திய அரசு தான். என ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

7 July 2026
1 min read
Dinamalar
மேகதாது பிரச்சனைக்கு மத்திய அரசே காரணம்: வைகோ கண்டுபிடிப்பு

சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் மத்திய 'வில்லன்' மத்திய அரசு தான். என ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: கடந்த 1960ல், தவறான ஆலோசனையால், தென் ஆப்பிரிக்கா, ரைஜீரியா நாடுகளில் இருந்து சீமக்கருவேல விதைகளை, இந்திய கொண்டு வரப்பட்டு விதைக்கப்பட்டன.

சீமக்கருவேல மரங்கள், நிலத்தடி நீரை உறிஞ்சுவதோடு, சுற்றுச்சூழலுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனை, தமிழகத்தின் எட்டு மாவட்டங்களில் சீமக்கருவேல மரங்களை அகற்றியுள்ளனர். அவற்றை முழுமையாக அகற்ற தமிழக அரசு, 19 ஆணைகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

காவிரியின் குறுக்கே, கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழகத்தின் 25 மாவட்டங்களில் குடிநீருக்கு கடுமையான பிரச்னை ஏற்படும். இந்த விவகாரத்தில் மத்திய 'வில்லன்' மத்திய அரசு தான். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு, அணை கட்ட அனுமதி வழங்கக்கூடாது. அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்தாலும், அது இந்திய ஒருமைப்பாட்டையே பாதிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Newspaper Clipping

Newspaper clipping

Share this article