தமிழக முதல்வர் விஜய்யுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்திப்பு...
இணையதளச் செய்திப் பிரிவு
தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய்யை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற மதிமுக 2 இடங்களில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்து கடந்த ஜூன் மாதம் மதிமுக வெளியேறியது.
இதனைத் தொடர்ந்து, திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்ததுதான் நான் செய்த மிகப் பெரிய தவறு என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (ஜூலை 17) காலை பதிவிட்டது அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் விஜய்யை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
ஏற்கெனவே, நானும், நமது இயக்கமும் சரியான முடிவுகளை இன்றைய அரசியலில் மேற்கொண்டிருக்கிறோம் எனவும் நிறைந்த நம்பிக்கையோடு பயணத்தைத் தொடர்வோம் எனவும் வைகோ கூறியிருந்த நிலையில் முதல்வர் விஜய் உடனான அவரது சந்திப்பு கவனம் பெற்றுள்ளது.
