திருசியில் இன்று எழுச்சியுடன் தொடங்கியது
சமத்துவ நடைபயணம்
கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் சமத்துவ நடைபயணத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் நடைபயண இலட்சினை கொடியை வழங்கி இன்று 02.01.2026 வெள்ளிக்கிழமை திருச்சியில் தொடங்கி வைத்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மைதீன்,
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர். தொல்.திருமாவளவன் எம்.பி.,
மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் அருணாசலம்,
திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் துரை சந்திரசேகர்
ஆகியோர் நடைபயணத்தின் சிறப்பினை எடுத்துரைத்து வாழ்த்தினர்.
மாண்புமிகு அமைச்சர் கே.என்.நேரு, தலைமை வகித்தார்,
மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார்.
கழக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. வரவேற்புரை ஆற்றினார்.
அமைச்சர்கள் மாண்புமிகு ரகுபதி, மாண்புமிகு மெய்யநாதன், திருச்சி மாநகர மேயர் அன்பழகன், மற்றும்
திமுக, மதிமுக மற்றும் தோழமை கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னணியினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
