புதிதாக அரசியலுக்கு வந்தவர்களால்.. திமுகவை ஒன்றும் செய்ய முடியாது.. விஜய்யை மறைமுகமாக சாடிய வைகோ!

புதிதாக அரசியலுக்கு வந்தவர்களால்.. திமுகவை ஒன்றும் செய்ய முடியாது.. விஜய்யை மறைமுகமாக சாடிய வைகோ!

புதிதாக அரசியலுக்கு வந்தவர்களாலும், ஏற்கனவே இருப்பவர்களாலும் திமுகவை வீழ்த்த முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். யாருடன் யார் கூட்டணி அமைத்தாலும் மக்கள் ஆதரவு திமுக கூட்டணிக்கு இருப்பதாக கூறிய வைகோ, திமுக மீண்டும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும் கூறியுள்ளார்.

16 டிசம்பர், 2025
1 நிமிடம் படிக்க
Oneindia
புதிதாக அரசியலுக்கு வந்தவர்களால்.. திமுகவை ஒன்றும் செய்ய முடியாது.. விஜய்யை மறைமுகமாக சாடிய வைகோ!

புதிதாக அரசியலுக்கு வந்தவர்களாலும், ஏற்கனவே இருப்பவர்களாலும் திமுகவை வீழ்த்த முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். யாருடன் யார் கூட்டணி அமைத்தாலும் மக்கள் ஆதரவு திமுக கூட்டணிக்கு இருப்பதாக கூறிய வைகோ, திமுக மீண்டும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும் கூறியுள்ளார்.தமிழ்நாட்டில் மது ஒழிப்பு கோரிக்கையை வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஜனவரி 2 முதல் திருச்சியில் இருந்து மதுரை நோக்கி நடைபயணம் மேற்கொள்கிறார். இதனை தொடங்கி வைப்பதற்காக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வைகோ அழைப்பிதழை வழங்கினார். சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் சூழலில், ஸ்டாலின் - வைகோ சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஏற்கனவே திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலக உள்ளதாக கூறப்பட்ட நிலையில், சில மாதங்களுக்கு முன் ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுக கூட்டணியில் மதிமுக தொடர்வதாக உறுதி செய்தார். இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெல்லும். திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். இதனை தொடக்க காலம் முதலே நான் சொல்லி வருகிறேன். யார் யாருடன் கூட்டணி அமைத்தாலும் சரி.. யார் எத்தகைய அறைகூவல்களை ஏவினாலும் சரி.. மக்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கே ஆதரவு இருக்கிறது. காலை உணவு திட்டம், விடியல் பயணத் திட்டம் என்று திமுக புதிய திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. திருவண்ணாமலையில் திமுக நடத்திய இளைஞரணி மாநாடு பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது. அதேபோல் ஜூனியர் உலகக்கோப்பையை நாள் தவறாமல் சென்று பார்த்தேன். அதனால் திமுக மீதான விமர்சனங்கள் எல்லாம் தவிடுபொடியாகிவிடும். புதிதாக அரசியலுக்கு வந்தவர்கள், ஏற்கனவே விமர்சிப்பவர்களால் திமுகவை வீழ்த்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.

செய்தித்தாள் படம்

Newspaper clipping

பகிர்